வங்கதேசத்தில் ராணுவ ஆட்சி!

வங்கதேச சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற தியாகிகளின் வாரிசுகளுக்கு அரசுப் பணிகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கடந்த ஜூலை மாதம் மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர் போராட்டக்காரர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தாக்குதலில் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்த இடஒதுக்கீட்டை 5 சதவீதமாக குறைத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, வன்முறை படிப்படியாகக் குறைந்தது.

இருப்பினும், இந்தப் போராட்டத்தின்போது மாணவர்களும், பொதுமக்களும் கொல்லப்பட்டதைக் கண்டித்து மாணவர் பாகு பாடு எதிர்ப்பு இயக்கம் என்ற பெயரில் மாணவர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து போராட்டக்காரர்களின் வன்முறை வலுவடைத்தை தொடர்ந்து பிரதமர் பதவியிலிருந்து ஷேக் ஹசீனா விலகியதாகத் கூறப்படுகிறது.

மேலும், ஷேக் ஹசீனா, நாட்டை விட்டு வெளியேறியதாக அந்நாட்டு ராணுவம் உறுதி செய்துள்ளது. இதனை தொடர் இடைக்கால அரசை ராணுவம் அமைத்துள்ளதாக அந்நாட்டு ராணுவ தளபதி அறிவித்துள்ளார்.

ஷேக் அசினா தப்பிச் சென்ற நிலையில் அவரது அதிகாரப்பூர்வ இல்லத்திற்குள் ஆயிரக்கணக்கில் மாணவர்களும் போராட்டக்காரர்களும் நுழைந்துள்ளனர்.

தற்போது ஷேக் ஹசீனாவின் ஹெலிகாப்டர் ஜார்கண்டின் தன்பாத் வான்பரப்பில் பறந்து வருவதாக ரேடரில் தகவல் வெளியாகி உள்ளது. ஷேக் ஹசீனா டெல்லியில் தஞ்சமடையக்கூடும் என கூறப்படுகிறது.

RELATED ARTICLES

Recent News