கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த மாதம் 30-ந் தேதி பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் வீடுகள், சாலைகள், பாலங்கள் என அனைத்தும் அடித்து செல்லப்பட்டன. அங்கு வசித்த மக்கள் மண்ணில் புதைந்தும், காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியும் காணாமல் போயினர்.
நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தில் உள்ள வீடுகளில் இருந்தவர்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதால், யாரும் இல்லாத அந்த வீடுகளில் திருட்டு கும்பல் கைவரிசை காட்டுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
உயிருக்கு அஞ்சி அவசரம் அவசரமாக கிளம்பிய மக்கள் வீட்டில் இருந்த உடைமைகளை அப்படியே விட்டு விட்டு சென்றனர். இதனால், இப்படி பூட்டி கிடக்கும் வீடுகளை குறிவைத்து, கொள்ளை சம்பவம் நடப்பதாக பாதிக்கப்பட்ட மக்கள் கூறியுள்ளனர். இதையடுத்து இரவு நேர ரோந்து பணியை தீவிரப்படுத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.