சிவலிங்கத்தை செங்கலால் மூடிய 3 பெண்கள்.. அதிர்ந்த பக்தர்கள்.. காரணம் இதுதான்..

மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் அருகே உள்ள சிட்டி செண்டர் பகுதியில், சிவன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு வந்த 3 பெண்கள், சிவலிங்கத்தை சுற்றிலும், செங்கல் மற்றும் சிமெண்ட்டால் மூடியுள்ளனர்.

கோவிலுக்கு வந்த பக்தர்கள், 3 பெண்களின் இந்த செயலை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர்கள் அளித்த தகவலின்பேரில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், 3 பெண்களையும் கைது செய்து விசாரணை நடத்தினர்.

அந்த விசாரணையில், கடவுள் சிவன் தங்களது கனவில் வந்ததாகவும், அவர்தான் சிவலிங்கத்தை சுற்றிலும் செங்கலால் மூட வேண்டும் என்று கூறியதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், அவ்வாறு செங்கலால் மூடினால் தான், சிவலிங்கம் வளரும் என்று சிவன் கனவில் கூறியதாகவும், அவர்கள் தெரிவித்துள்ளனர். இதனைக் கேட்டு அதிர்ந்த காவல்துறையினர், மத உணர்வை புண்படுத்தியதாக கூறி, அவர்கள் 3 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

RELATED ARTICLES

Recent News