பகத் ஃபாசில் நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரிலீசான திரைப்படம் ஆவேசம். மலையாள மொழியில் ரிலீசான இந்த திரைப்படம், தமிழ் ரசிகர்கள் மத்தியிலும், நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இதனால், தமிழ், மலையாள ஆகிய இரண்டு மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு, இப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆனது.
இந்நிலையில், இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகர் பாலகிருஷ்ணா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கு மொழியில் பல்வேறு மாஸ் மசாலா கமர்ஷியல் திரைப்படத்தில் நடித்து பெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்து பாலய்யா, இப்படத்தில் நடிக்க இருப்பது, பகத் ஃபாசில் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.