பிரசாந்த், சிம்ரன், பிரியா ஆனந்த், யோகி பாபு, ஊர்வசி என்று பலர் நடித்துள்ள திரைப்படம் அந்தகன். இப்படம், நாளை உலகம் முழுவதும், திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு தற்போது நடைபெற்றது. இதில், செய்தியாளர் ஒருவர், இடுப்பு வலி தொடர்பான ஆபாசமான கேள்வி ஒன்றை கேட்டுள்ளார்.
இதனால், கடுப்பான நடிகை பிரியா ஆனந்த், “நாம எல்லோரும் ஒரே ஊரு தானே. ஏன் இந்த மாதிரியான கேள்வி கேட்குறீங்க. சில நேரங்களில் ஏன் தமிழ் தெரிந்தது என தோன்றுகிறது” என்று தெரிவித்தார். செய்தியாளரின் இந்த கேள்வியால், அப்பகுதியில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.