பொதுவாக ஒரு வருடத்தில், ஒரு படங்களை நடிப்பது தான் அஜித்தின் வழக்கம். ஆனால், தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி இரண்டு படங்களில், தொடர்ச்சியாக நடித்து வருகிறார்.
இந்நிலையில், அஜித்தின் மேலாளரான சுரேஷ் சந்திரா, பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அந்த பேட்டியில், “ ‘விடாமுயற்சி’, ‘குட் பேட் அக்லி’ – இப்ப அவரது கவனம் முழுவதும் இந்த இரண்டு படங்களை முடித்துக் கொடுப்பதில்தான் இருக்கிறது.
இந்தச் சமயத்தில் அவரது மூன்றாவது படத்தைப் பற்றி நினைப்பது சாத்தியமே இல்லாத ஒரு விஷயம். ‘குட் பேட் அக்லி’யின் ஷூட்டிங் டிசம்பருக்குள் முடிந்துவிடும்.
இதற்கடுத்து சில மாதங்கள் ரிலாக்ஸ் ஆன பின்னரே, மூன்றாவது படத்திற்கான அறிவிப்பு வரும். அதற்கு அடுத்தாண்டு மே மாதம் கூட ஆகலாம்” என்று கூறியுள்ளார்.