ஹாலிவுட் சினிமாவின் தரமான இயக்குநர்களில் ஒருவர் ஜேம்ஸ் கேமரூன். இவர், டெர்மினேட்டர், டைட்டானிக் என்று பல்வேறு படங்களை இயக்கியிருக்கிறார்.
அவதார் படத்தின் மூலம், உலகத்தை பிரம்மிக்க வைத்த இவர், கடந்த 2022-ஆம் ஆண்டு, அவதார் 2-ஆம் பாகத்தை ரிலீஸ் செய்திருந்தார். அந்த படமும், உலக அரங்கில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.
இந்நிலையில், இன்று, 3-ஆம் பாகத்திற்கான பெயரை, படக்குழுவினர் அறிவித்துள்ளனர். அதன்படி, 3-ஆம் பாகத்திற்கு, Avatar : Fire and Ash என்று டைட்டில் வைத்துள்ளனர்.
இதனை வைத்து பார்க்கும்போது, இந்த பாகத்தில், நெருப்பும் அது சார்ந்த இடத்தையும் மையப்படுத்தி, 3-ஆம் பாகத்தை இயக்க உள்ளனர் என்று தெரிகிறது. 2-வது பாகம் நீரும் அது சார்ந்த இடத்தையும் மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.