மாஸ்டர் படத்தின் மூலம் பிரபலம் அடைந்தவர் நடிகை மாளவிகா மோகனன். இவர், சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், நயன்தாராவின் நடிப்பு குறித்து விமர்சித்திருந்தார்.
அதில், “ஒரு ஹாஸ்பிடல் சீனில், முடி கூட களையாமல், அந்த நடிகை நடித்திருந்தார்” என்று விமர்சனம் செய்திருந்தார். இதற்கு, நடிகை நயன்தாரா தற்போது, பதிலடி கொடுத்துள்ளார்.
“அந்த நடிகை சொல்வதற்காக முடியை விரிச்சு போட்டுவிட்டு உட்கார முடியுமா” என்று நயன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், கமர்ஷியல் படங்களுக்கும், ரியாலிட்டி படங்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது. இயக்குநர்களுக்கு ஏற்றார்போல் தான் நடிக்க வேண்டும் என்று நயன்தாரா கூறியுள்ளார்.