ஷங்கர் இயக்கத்தில், கமல் ஹாசன் நடிப்பில் உருவாகியிருந்த திரைப்படம் இந்தியன் 2. சமீபத்தில் ரிலீஸான இப்படம், கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. மேலும், வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய பாதிப்புகளை இப்படம் பெற்றது.
இந்நிலையில், 2-ஆம் பாகம் தந்த பாடத்தால், 3-ஆம் பாகத்தில் சில மாற்றங்களை கொண்டு வர ஷங்கர் முடிவு செய்துள்ளாராம்.
அதாவது, 3-வது பாகத்தை, பொங்கலுக்கு ரிலீஸ் செய்யலாம் என்று படக்குழுவினர் முதலில் முடிவு செய்திருந்தார்களாம்.
தற்போது, கோடை விடுமுறைக்கு படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார்களாம். இந்த இடைப்பட்ட காலத்தில், சில காட்சிகளை மீண்டும் எடுப்பதற்கும், படக்குழுவினர் முடிவு செய்துள்ளார்களாம்.