15 வயது சிறுமிக்கு திருமணம்; கணவர், மாமியார் போக்சோ சட்டத்தின் கைது!

தாம்பரத்தில் 15 வயது சிறுமிக்கு திருமணம் செய்ததிற்காக சிறுமியின் கணவர் மற்றும் மாமியார் ஆகியோரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

சென்னை தாம்பரம் அடுத்த மேற்கு தாம்பரம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் (30). இவர் கடந்த ஏப்ரல் மாதம் 22ம் தேதி அதே பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை பெற்றோர்கள் சம்மதத்துடன் மேற்கு தாம்பரம், ஸ்டேட் பேங்க் காலனி பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில் வைத்து திருமணம் செய்து வைத்தனர். இதனை தொடர்ந்து இருவரும் கணவன், மனைவியாக வாழ்ந்து வந்துள்ளனர்.

இந்நிலையில், சிறுமி கருவுற்ற நிலையில் மூன்றரை மாதம் முடிவில் அவருக்கு அதிகளவிலான ரத்தப்போக்கு ஏற்பட்டு கடந்த 8ம் தேதி முதல் குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையடுத்து, சிறுமி குறித்து மருத்துவமனையில் இருந்து தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் போலீசார் சிறுமியின் கணவர், சிறுமியின் மாமியார் மற்றும் சிறுமியின் தாயார் ஆகியோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணைக்கு பின்னர் சிறுமியின் கணவரான ஆனந்த் மற்றும் அவரது தாயார் விஜயா (55) ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி நீதிமன்ற உத்தரவின் படி சிறையில் அடைத்தனர்.

RELATED ARTICLES

Recent News