மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் விஷ வாயுத்தாக்கி உயிரிழப்பு!

சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்த ஜேபி எஸ்டேட் பகுதி சரஸ்வதி நகர் குறிஞ்சி தெருவில் அமைந்துள்ள பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு இருந்ததை சரி செய்யும் பணியில் ஆவடி மாநகராட்சி ஒப்பந்த ஊழியர்கள் நான்கு நபர்கள் ஈடுபட்டிருந்தனர்.

இந்தப் பணியில் ஆவடி அருந்ததிபுரம் பகுதியை சேர்ந்த கோபிநாத் (25) பாதாள சாக்கடைக்குள் இறங்கி சரி செய்து கொண்டிருக்கும் பொழுது மூச்சு அடைப்பு ஏற்பட்டு மேலே ஏறும்பொழுது அவரால் ஏற முடியாமல் விஷ வாய்வு தாக்கி பாதாள சாக்கடைக்குள் மயங்கி விழுந்துள்ளார்.

உடனடியாக அருகில் இருந்தவர்கள் இச்சம்பவம் குறித்து ஆவடி தீயணைப்புத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த நிலையில் விரைந்து வந்த ஆவடி தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துமயங்கி விழுந்தவரை மீட்டு உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு பரிசோதனை செய்ததில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

இந்த சம்பவம் குறித்து ஆவடி காவல்துறையினர் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை செய்து வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News