ஸ்டியோ க்ரீன் என்ற சினிமா தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருபவர் ஞானவேல் ராஜா. பல்வேறு வெற்றிப் படங்களை கொடுத்த இவர், திரைப்பட தயாரிப்புக்காக, அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் என்பவரிடம் இருந்து, கடன் வாங்கியதாக கூறப்படுகிறது.
ஆனால், வாங்கிய கடனை நீண்ட நாட்களாகியும் திருப்பி தராததால், அவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், தங்கலான் திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன், 1 கோடி ரூபாயை டெபாசிட்டாக வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதேபோல், கங்குவா திரைப்படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு, 1 கோடி ரூபாயை டெபாசிட்டாக வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கை வரும் 14-ஆம் தேதிக்கு, நீதிபதி ஒத்திவைத்தார்.