இமாச்சல பிரதேசம், பஞ்சாபில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து கொண்டிருக்கிறது.
இதன் காரணமாக பஞ்சாபின் ஜெய்ஜோன் பகுதியில் உள்ள தரைப்பாலத்தில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு பாய்ந்து கொண்டிருந்தது.
அந்த தரைப்பாலத்தை கடக்க முயன்றபோது கார் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டது. இதில் ஓட்டுநர் உட்பட 11 பேர் உயிரிழந்தனர். தீபக் என்ற இளைஞர் மட்டும் உயிருடன் மீட்கப்பட்டார்.