உதயநிதி தான் துணை முதலமைச்சரா? கூட்டத்தில் சொன்ன அமைச்சர்!

திமுக கட்சியின் மீது வைக்கப்படும் மிக முக்கிய விமர்சனங்களில் ஒன்று வாரிசு அரசியல். இந்த விமர்சனங்கள் இன்றளவும் தொடர்ந்துக் கொண்டு தான் உள்ளது. தற்போது, இந்த விமர்சனங்களுக்கு உரமூட்டும் வகையில், அமைச்சர் கீதா ஜீவனின் பேச்சு அமைந்துள்ளது.

அதாவது, தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில், சமூக மற்றும் பெண்கள் நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் கலந்துக் கொண்டார். அப்போது பேசிய அவர், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை, எதிர்கால துணை முதலமைச்சர் என்று குறிப்பிட்டார்.

இவர் இவ்வாறு குறிப்பிட்டிருப்பது, உதயநிதி ஸ்டாலினுக்கு பெரிய பதவி கிடைக்க உள்ளது என்ற தகவலை, இன்னும் வலிமையாக்கியுள்ளது.

இதேபோல், கடந்த வெள்ளிக் கிழமை அன்று, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் நிகழ்வு ஒன்றில் பேசும்போது, உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சர் என்று குறிப்பிட்டார்.

பின்னர், தனது பேச்சை திருத்திக் கொண்ட அவர், ஆகஸ்டு 19-ஆம் தேதிக்கு பிறகு தான், உதயநிதி ஸ்டாலினை, துணை முதலமைச்சர் என்று கூற முடியும் என்று தெரிவித்தார்.

இவ்வாறு, முக்கிய கட்சி நிர்வாகிகள் கூறி வந்தபோதிலும், தனது மகனை துணை முதலமைச்சராக அறிவிப்பதற்கான சரியான நேரம் இது கிடையாது என்று, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News