பொதுமக்களின் அன்றாட தேவைகளான பால், தயிர், வெண்ணெய், நெய், பன்னீர், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பால் பொருட்களை ஆவின் நிறுவனம் வழங்கி வருகிறது.
அந்த வகையில் இந்த மாதம் 26-ம் தேதி வரவுள்ள கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டும் அடுத்த மாதம் 7-ம் தேதி வரவுள்ள விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டும் நெய் விலையில் தள்ளுபடி அறிவித்துள்ளது.
அதாவது 100 மில்லி லிட்டர் ஆவின் நெய்யில் ரூ.10 தள்ளுபடி செய்துள்ளது. அதன் படி, ரூ.85-க்கு விற்பனை செய்யப்பட்ட 100 மில்லி லிட்டர் நெய்யின் விலை ரூ.75 ஆக விற்பனை செய்யப்படவுள்ளது. இந்த தள்ளுபடியானது அடுத்த மாதம் 15-ம் தேதி வரை அமலில் இருக்கும் என ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது.