சென்னை ஆவடி மார்கெட் பகுதியில், நடைபாதை வியாபாரிகள் பலர், தங்களது வியாபாரத்தை நடத்தி வருவது வழக்கம்.
இது நடைபாதையில் நடந்து செல்லும் பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாக கூறி, இன்று புகார் அளிக்கப்பட்டது.
புகாரை ஏற்றுக் கொண்ட அதிகாரிகள், அங்கிருந்த கடைகளையும், தள்ளுவண்டிகளையும் அகற்றும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கிருந்த மின்வாரிய டிரான்ஸ்பார்மரையொட்டி, இளைஞர் ஒருவர் செருப்பு கடையை நடத்தி வந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள், அவரிடம் கடையை அகற்றுமாறு தெரிவித்தனர்.
ஆபத்தை உணராமல், வியாபாரத்திற்காக இளைஞர் செய்த இந்த செயல், அங்கிருந்தோரை பரபரப்புக்கு ஆளாக்கியது.