வீட்டில் இருந்த 2 பெண்கள்.. மாஸ் அணிந்துக் கொண்டு வந்த 10 பேர்.. பரபரப்பு சம்பவம்..

தலைநகர் டெல்லியில் புதிய அசோக் நகர் பகுதியில் வசித்து வருபவர் சுனிதா. இவருக்கு, காஜல் என்ற மகள் உள்ளார். இவர்களுக்கும், இவர்களது உறவினர் ராம்விலாஸ் என்பவருக்கும் இடையே, சொத்து பிரச்சனை இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த பிரச்சனை தற்போது அதிகரித்த நிலையில், ராம் விலாஸ் தனது மகன்கள், சித்ரன்ஷூ, பிரியன்ஷூ, பேட்டு ஆகியோர்களுடனும், வேறு சில நபர்களுடனும், சுனிதாவின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

அங்கு, அவர்கள் இரண்டு பேரையும் கடுமையாக தாக்கியுள்ளார். கடந்த சனிக்கிழமை அன்று இந்த சம்பவம் நடந்த நிலையில், காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து, குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளும், தற்போது வெளியாகி, நெட்டிசன்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News