உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் பகுதியை சேர்ந்த ராஜ்கிர் மிஸ்ட்ரி. 46 வயதாகும் இவருக்கு, கடந்த சில நாட்களாக, அடிவயிற்றில் கடுமையான வலி ஏற்பட்டுள்ளது. இதனால், மருத்துவமனைக்கு சென்ற அவருக்கு, ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளது.
அந்த ஸ்கேனில், அடிவயிற்றில் சதை இருப்பதாகவும், அது அருகில் உள்ள உடலுறுப்புகளை அழுத்துவதால், குடலிறக்க பிரச்சனை ஏற்பட்டுள்ளதாகவும், தெரியவந்துள்ளது.
இதையடுத்து, நரேந்திர தேவ் என்ற மருத்துவர், அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். அப்போது, அவரது வயிற்றின் அடியில் இருப்பது சதை அல்ல என்றும், அது கருப்பையும் என்றும் தெரியவந்தது.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மருத்துவர், அந்த கருப்பையை நீக்கியுள்ளார். பிறப்பிலேயே இந்த பிரச்சனை அவருக்கு இருந்துள்ளது என்றும், இதனால் பெண்மை சம்பந்தமான அம்சங்கள் எதுவும் இவருக்கு இல்லை என்றும் தெரியவந்துள்ளது. அறுவை சிகிச்சைக்கு பிறகு, ராஜ்கிர் நலமுடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது.