சிவகங்கை அருகே உள்ள அழகு நாச்சியம்மன் கோவிலில் ஆடித் திருவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்த அக்னிச்சட்டி எடுத்துச் சென்றனர்.
அப்போது கோவில் அருகே உள்ள ஆலமரத்தில் இருந்த விஷ வண்டுகள் பக்தர்களை விரட்டி விரட்டிக் கடித்தன. இதில் 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
வர்கள் சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விஷ கண்டு கடித்து 40 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.