ஒரே நாளில் 4 வயது சிறுவன் உட்பட இரண்டு பேரை கடித்த வெறிநாய்!

செய்யூரில் ஒரே நாளில் 4 வயது சிறுவன் உட்பட இரண்டு பேரை வெறிநாய் கடித்ததால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செய்யூர் ஊராட்சிக்கு உட்பட்ட வெள்ளிமேடு பகுதியைச் சேர்ந்தவர் டேனியல் இவரது மகன் ஜெஃப்ரின் (4) வீட்டில் எதிரில் விளையாடி கொண்டு இருந்த போது அவ்வழியாக வந்த வெறி பிடித்த நாய் சிறுவரின் வலது தோள்பட்டை பகுதியில் பலமாக கடித்தது இதில் பலத்த காயமடைந்த சிறுவன் கதறி துடித்துள்ளனார்.

இதையறிந்த பெற்றோர்கள் உடனடியாக அவரை மீட்டு செய்யூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

பின்னர் அதே நாய் அப்பகுதியை சேர்ந்த விக்னேஷ் (30) என்பவரையும் வலது காலில் கடித்துவிட்டு அங்கிருந்து ஓடியுள்ளது.

இப்படி ஒரே நாளில் தொடர்ந்து இரண்டு நபரை நாய் கடித்து இருப்பது செய்யூர் சுற்றுவட்டார பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

RELATED ARTICLES

Recent News