மனிதனின் உடலில் மைக்ரோ பிளாஸ்டிக் என்ற பெயரில், பல்வேறு ஆராய்ச்சிகள், உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகளால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆராய்ச்சிகளில், பெரும்பாலும், மனிதனின் உடலுக்குள் மைக்ரோ பிளாஸ்டிக் இருப்பதாகவே தெரியவந்திருக்கிறது.
அந்த வகையில், சுற்றுச்சூழல் தொடர்பாக ஆராய்ச்சி செய்து வரும் டாக்ஸிக் லிங்க் என்ற நிறுவனம், தங்களது புதிய ஆராய்ச்சி ஒன்றை செய்துள்ளது.
அதாவது, உப்பு மற்றும் சர்க்கரையில் உள்ள மைக்ரோ பிளாஸ்டிக் என்ற பெயரில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில், கல் உப்பு, தூள் உப்பு, கடல் உப்பு என்று 10 வகையான உப்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், பல நிறுவனங்கள் மூலம் விற்கப்படும் உப்புகள், ஆன்லைனில் இருந்தும், கடைகளில் இருந்தும் வாங்கப்பட்டுள்ளது. இவ்வாறு நடத்தப்பட்டு ஆய்வில், பல்வேறு வடிவங்களில், 0.1 mm-ல் 5 mm வரையில், மைக்ரோ பிளாஸ்டிக் இருப்பது தெரியவந்துள்ளது.
அதிக அளவிலான மைக்ரோ பிளாஸ்டிக், அயோடின் உப்புகளில் அதிகம் இருப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், இயற்கையான கல் உப்பில் குறைந்த அளவு மைக்ரோ பிளாஸ்டிக் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், ஒரு கிலோ கிராம் சர்க்கரையில், 11.85 செறிவில் இருந்து 68.25 வரை இருப்பதும், ஆய்வின் மூலம், கண்டறியப்பட்டுள்ளது.
ஒரு இந்தியர் சராசரியாக, ஒரு நாளைக்கு 10.98 கிராம் உப்பையும், 10 ஸ்பூன் சர்க்கரையையும், உண்கிறார். ஆனால், உலக சுகாதார அமைப்பின் அனுமதித்துள்ள அளவை விட, இது அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.