ராமர் கோவிலுக்கு செல்லும் வழியில் அமைக்கப்பட்டிருந்த தெரு விளக்குகள் திருட்டு

உத்தரபிரதேசம் அயோத்தியில் ராமர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கானோர் அயோத்தி ராமர் கோவில் சென்று வழிபாடு நடத்தி வருகின்றனர்.

அயோத்தி ராமர் கோவில் செல்லும் வழியில் ஆயிரக்கணக்கான வண்ண விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 6 ஆயிரத்து 400 வண்ண விளக்குகளும், 96 லேசர் விளக்குகளும் அமைக்கப்பட்டன. இந்த விளக்குகளில் மதிப்பு சுமார் 1 கோடி ரூபாய் ஆகும்.

இந்நிலையில், அயோத்தி கோவில் செல்லும் வழியில் அமைக்கப்பட்டிருந்த வண்ண விளக்குகளில் 3 ஆயிரத்து 800 விளக்குகள் திருடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News