சுதந்திர தின விழாவையொட்டி தொடர்ந்து சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் வருகிறது. தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைப்பதால் ஏராளமான மக்கள் சொந்த ஊருக்கு புறப்பட் தயாராகி வருகின்றனர். ரயில்களில் கூட்டம் நிரம்பி வழியும் நிலையில் தமிழக அரசு சார்பாக சிறப்பு பேருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விமான கட்டணமானது பல மடங்கு அதிகரித்துள்ளது. சென்னையில் இருந்து மதுரைக்கு ரூ.4 ஆயிரத்து 63ஆக இருந்த விமான கட்டணம், இன்றும், நாளையும் கட்டணம் 11ஆயிரம் ரூபாயாக அதிகரித்துள்ளது.
இதே போல சென்னை – தூத்துக்குடிக்கு 4ஆயிரமாக இருந்தவிமான கட்டணம் 11ஆயிரத்து 500 ரூபாயாக உயர்ந்துள்ளது. கோவை விமான கட்டணம் 5,349 ரூபாயாகவும், திருச்சிக்கு 7ஆயிரத்து 200 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.