சிவகாசியில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதாவது:-
அதிமுகவில் உழைப்பவர்களுக்கு மட்டுமே பதவி. கட்சியை வைத்துப் பிழைக்க நினைப்பவர்களுக்கு இடமில்லை. மக்களவை தேர்தல், சட்டப் பேரவை தேர்தல் எனப் பிரித்துப் பார்த்து வாக்களிப்பவர்கள் தமிழக மக்கள்.
2026 சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் ரேஷன் அட்டை வைத்துள்ள அனைத்து மகளிருக்கும் பாகுபாடின்றி மாதந்தோறும் ரூ.2,500 வழங்கப்படும். அதற்காக மத்திய அரசிடம் இருந்து எப்படி நிதி வாங்க வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும். அதிமுகவுக்கு அழிவு என்பதே கிடையாது.
எதிர்க்கட்சியாக இருக்கும் போது ‘கோ பேக் மோடி’என்று கருப்பு பலூன் பறக்கவிட்ட திமுக, ஆட்சிக்கு வந்தபின் அமைதியாகி விட்டது. இவ்வாறு அவர் பேசினார்.