கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியில், அண்ணாமலை கூறிய விலைக்கும், அமேசான் தளத்தில் காட்டும் விலைக்கும் பெரிய வித்தியாசம் இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது.
கோவையில் பாஜக சார்பாக மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
95 மாற்றுத்திறனாளிகளுக்கு காது கேட்கும் கருவி, செயற்கை கால் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டது. அதில் காது கேளாதோருக்கு Cyber Sonic என்ற நிறுவனத்தின் கருவி வைக்கப்பட்டிருந்தது. அதை பரிசோதித்தபோது Made in China என குறிப்பிடப்பட்டிருந்தது.
ஒவ்வொரு மெஷினும் 10,000 ரூபாய்க்கு மேல் இருக்கக் கூடிய மெஷின் 95 பேருக்கு வழங்கப்படுகிறது என அண்ணாமலை கூறினார். ஆனால் இந்த கருவியை இணையத்தில் தேடிய போது இதே சிறப்பம்சங்களுடன் கூடிய Cyber Sonic நிறுவனத்தின் கருவி ரூ.345 என குறிப்பிடப்பட்டிருந்தது. தற்போது இது குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.