நாகர்கோயில் பேருந்து நிலையத்திலிருந்து (ஆக.19) நேற்று இரவு 9:30 மணிக்கு திருவண்ணாமலைக்கு புறப்பட்ட அரசு பேருந்து இன்று காலை பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் வந்தபோது நடத்துனர் கவுண்டப்பன் பேருந்து நிலையத்திலிருந்த டீக்கடை ஒன்றில் டீ குடித்துள்ளார்.
பின்னர் மீண்டும் பேருந்துக்கு வந்து பேருந்து புறப்படுவதற்கு முன்பு பார்த்தபோது அவரது பணப்பையில் இருந்த பயணிகள் கட்டண தொகை 27 ஆயிரத்து 300 ரூபாய் பணம் முழுவதும் திருட பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதனையடுத்து அரசு பேருந்து ஓட்டுநர் செல்வகுமார் மற்றும் நடத்துனர் கவுண்டப்பன் ஆகியோர் பெரம்பலூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரை அடுத்து பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.