ஒரே வாரத்தில் 26 பேருக்கு குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறை

சென்னையில் குற்றங்களை குறைக்க காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன்படி கடந்த ஜனவரி மாதம் தொடங்கி ஆகஸ்ட் 18-ம் தேதி வரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் 862 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில், கொலை, கொலை முயற்சி, பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் ஆகிய குற்றங்களில் ஈடுபட்ட 468 பேரும், திருட்டு, வழிப்பறி, பண மோசடி குற்றங்களில் ஈடுபட்ட 133 பேரும், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக 193 பேரும் சிறைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

கடந்த 12-ம் தேதியில் இருந்து 18-ம் தேதி வரையிலான 7 நாட்களில் சென்னையில் 26 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News