உஷார்… பிரபல ஹோட்டலில் வாங்கிய சிக்கனில் உடைந்த கண்ணாடி துண்டுகள்!

ஶ்ரீவில்லிபுத்தூர் – மதுரை சாலையில் பிரபலமான பிரியாணி ( ஆசீப் )ஹோட்டல் செயல்பட்டு வருகிறது. இங்கு அதே பகுதியை சேர்ந்த முகமது பாரித் என்பவர், குழந்தைகளுக்காக பெப்பர் பார்பிக்யூ சிக்கன் வாங்கி உள்ளார்.

வீட்டுக்கு சென்று பிரித்து சாப்பிட்டு பார்த்த போது பாரித் வாயில் காயம் ஏற்பட்டு ரத்தம் கசிந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சிக்கன் துண்டுகளை பிரித்து பார்த்த போது, உள்ளே உடைந்த கண்ணாடி துண்டுகள் ஏராளமாக கிடந்துள்ளது.

இது குறித்து அவர் நேரடியாக சென்று கடையின் ஊழியர்களிடம் விசாரித்துள்ளார். அப்போது, தண்ணீர் இருந்த கண்ணாடி பாட்டில் சமையலறையில் விழுந்து உடைந்ததாகவும், உடைந்த கண்ணாடி துண்டுகளை உடனடியாக அப்புறப்படுத்தியதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஆனால் அங்கிருந்த மசாலா பாத்திரத்திற்குள் கண்ணாடி துண்டுகள் விழுந்ததை பார்க்காமல், அப்படியே சிக்கனில் தோய்த்து பொரித்து வாடிக்கையாளருக்கு விற்பனை செய்ததாகவும் தெரிவித்துள்ளனர். கண்ணாடி துண்டு இருந்த சிக்கனை பெரியவருக்கு பதிலாக குழந்தைகள் சாப்பிட்டிருந்தால் உயிருக்கே ஆபத்து ஏற்பட்டிருக்கும் என பாரித் உணவக ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனை தொடர்ந்து குழந்தைகளின் உயிருடன் விளையாடும் வகையில் அலட்சியமாக செயல்பட்ட ஹோட்டல் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி, பாரித் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு புகார் அனுப்பி உள்ளார். இது குறித்து உணவு பாதுகாப்பு துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News