அசோக் செல்வன், சாந்தனு பாக்யராஜ் முக்கிய வேடங்களில் நடித்திருந்த திரைப்படம் ப்ளு ஸ்டார். கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்நிலையில், இந்த வெற்றிக்கு பிறகு, இப்படத்தின் இயக்குநர் எஸ்.ஜெயக்குமார், அடுத்ததாக என்ன படம் இயக்க உள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது. அதாவது, தருமபுரியில் உள்ள தலித் மக்கள் சிலர், 2-ஆம் உலகப் போரில் கலந்துக் கொண்டார்களாம்.
இந்த போருக்கு சென்ற பிறகு, ராணுவ உடையில், ஊருக்கு வருகிறார்கள். அப்போது, அவர்கள் உயர்சாதி என்று அழைக்கப்படும் மக்களின் பகுதிக்கு நுழையும்போது ஏற்பட்ட பிரச்சனையை மையப்படுத்தி திரைப்படம் ஒன்று உருவாக உள்ளது. இந்த படத்தை தான், அவர் இயக்க உள்ளாராம். இந்த தகவலை, இயக்குநர் பா.ரஞ்சித் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.