சென்னை நாள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

ஆகஸ்ட் 22-ம் தேதி ‘சென்னை தினம்’ கொண்டாடப்படுகிறது. சென்னை ‘385’ வயதை எட்டியிருக்கும் சூழலில் பல்வேறு கொண்டாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், “சென்னை நிலமாக மட்டுமல்ல, இந்த நிலத்தின் மீது வாழும் ஒவ்வொரு மனிதரின் உயிராகவும் இருக்கிறது. வாழ்வு தேடி வந்த பலருக்கும் வசந்தத்தை வழங்கிட வா என்று தன் மடியோடு ஏந்திக்கொண்ட தாய் சென்னை! இந்தத் தருமமிகு சென்னையே நமது சமத்துவபுரம்! பல கனவுகளை வெற்றிக் கதைகளாக எழுதிய – எழுதும் நம் சென்னையைக் கொண்டாடுவோம்!” எனப் பதிவிட்டுள்ளார்.

RELATED ARTICLES

Recent News