நேபாளத்தில் 40 இந்திய பயணிகளுடன் சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
நேபாளத்தில் பொக்காராவில் இருந்து காத்மாண்டு நோக்கி 40 பேர் இந்தியர்கள் பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். தனாஹூன் மாவட்டத்தில் உள்ள மார்ஸ்யாங்டி ஆற்றின் அருகேயுள்ள பாதையில் சென்றபோது பேருந்து டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் பயணிகள் தண்ணீரில் மூழ்கினர். உள்ளூர் நீச்சல் வீரர்கள் உதவியுடன் ஆற்றில் விழுந்த 16 பேர் மீட்கப்பட்டனர். 14 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களது உடல்கள் மீட்கப்பட்டன. மற்றவர்களை தேடும் பணி தொடர்ந்து நடக்கிறது.