புதிய வகை கொரோனாவின் அறிகுறிகள் என்ன தெரியுமா?

சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் திடீர் எழுச்சி பெற்று பரவி வருகிறது. இந்த பிஎப்.7 வைரஸ், இந்தியாவிலும் நுழைந்துவிட்டது. இந்தியாவில் இதுவரை 3 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன் அறிகுறிகள் என்ன?

இந்த தொற்று வழக்கமான தொற்றை போலவே காய்ச்சல், இருமல், சோர்வு ஆகியவை ஏற்படும். மேலும் நோய் எதிர்ப்பு சக்தியை பலவீனப்படுத்தி கடுமையான உடல்நலக் குறைவை ஏற்படுத்தும்.

ஒரு சிலருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப் போக்கு போன்ற பாதிப்புகளும் ஏற்படலாம்.

தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு எளிதில் இந்த வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தும் என மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

அடுத்த சில மாதங்களில் சுமார் 10 லட்சம் இறப்புகள் ஏற்படலாம் என உலக சுகாதார அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

பொதுமக்கள், கூட்ட நெரிசல் உள்ள பகுதிகளில் முக கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News