தேமுதிக அலுவலகம் இனி கேப்டன் ஆலயம் என்று அழைக்கப்படும்: பிரேமலதா விஜயகாந்த்!

மறைந்த தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்தின் 72 வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், சென்னை தேமுதிக தலைமை அலுவலகத்தில் அவரது சிலையை கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திறந்து வைத்தார். சிலையை திறந்து வைத்த பிரேமலதா, கண் கலங்கினார். விஜயகாந்த் சிலை திறப்பு விழாவில் விஜயகாந்தின் மகன்கள், தேமுதிக நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். காலை முதலே ஏராளமான தொண்டர்கள் விஜயகாந்தின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா, “தேமுதிக தலைமை அலுவலகம் இனி கேப்டன் ஆலயம் என்று அழைக்கப்படும். விஜயகாந்த் பிறந்தநாளை தேமுதிக சார்பில் வறுமை ஒழிப்பு தினமாக கடைபிடிக்க இருக்கிறோம். இன்று வருகின்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்படும். தமிழகம் முழுவதும் சுமார் 25 லட்சம் பேருக்கு அன்னதானமும், நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது” என தெரிவித்தார்.

RELATED ARTICLES

Recent News