போக்குவரத்து கழக ஓய்வூதியதாரர் நல அமைப்பின் பொதுச் செயலாளராக இருப்பவர் கே.கர்சன்.
இவர், இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கடந்த 106 மாதங்களாக, தங்களது அகவிலைப்படி உயர்த்தப்படவில்லை என்றும், இதுதொடர்பாக உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், அரசு காலம் தாழ்த்தி வருகிறது என்றும் குற்றஞ்சாட்டினார்.
மேலும், தங்களது அமைப்பின் உறுப்பினர்களுக்கான மருத்துவக் காப்பீடும் இன்னும் வழங்கப்படவில்லை என்று தெரிவித்தார்.
எனவே, இந்த பிரச்சனைகளை சரி செய்ய வலியுறுத்தி, நாளை தமிழகம் முழுவதும் உள்ள 9 முக்கிய பகுதிகளில், மறியல் போராட்டம் நடத்த உள்ளோம் என்று அவர் கூறினார்.