சூரி, விஜய்சேதுபதி, மஞ்சு வாரியர் ஆகியோர் நடிப்பில், தற்போது உருவாகி வரும் திரைப்படம் விடுதலை 2. வெற்றிமாறன் இயக்கி வரும் இந்த படத்தின் பின்னணி பணிகள், பல நாட்களாக நடந்து வருகிறது.
இந்த ஆண்டு இறுதிக்குள் இப்படம் ரிலீஸ் ஆகிவிடும் என்றும் சொல்லப்படுகிறது. இந்நிலையில், இந்த திரைப்படத்தின் 3-ஆம் பாகம் உருவாக இருப்பதாக, தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, 2-ஆம் பாகத்தின் காட்சிகள் அதிகமாக இருப்பதால், அதில் மிஞ்சிய காட்சிகளை வைத்து, 3-ஆம் பாகத்தை எடுக்க வெற்றிமாறன் முடிவு செய்துள்ளாராம்.
இந்த தகவல் உறுதியாகும் பட்சத்தில், சூர்யாவின் வாடிவாசல் திரைப்படம் தொடங்குவதற்கு, இன்னும் பல வருடங்கள் ஆகலாம் என்று கணிக்கப்படுகிறது. இதனை அறிந்த ரசிகர்கள், அதிருப்தி அடைந்துள்ளனர்.