பிஜிலி ரமேஷின் கடைசி ஆசை இதுதான்! நிறைவேறியதா?

Youtube-ல் வெளியான பிராங்க் ஷோவின் மூலம் பிரபலம் அடைந்தவர் பிஜிலி ரமேஷ். இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து, சினிமாவில் அறிமுகமான இவர், நட்பே துணை, எல்.கே.ஜி என்று பல்வேறு படங்களில் நடித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பிஜிலி ரமேஷ், நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

இவரது மறைவை அறிந்த ரசிகர்கள், தங்களது இரங்கல்களை இணையத்தில் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், பிஜிலி ரமேஷின் மனைவி பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அந்த பேட்டியில், ரஜினியின் திரைப்படத்தில், ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்று தனது கணவர் விரும்பியதாக கூறியுள்ளார்.

ஆனால், பல்வேறு முயற்சிகள் எடுத்த பிறகும், பிஜிலி ரமேஷின் ஆசை, நிறைவேறாமலே போய்விட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News