மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாராஒலிம்பிக் போட்டி பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது. இதில் உலகம் முழுவதில் இருந்து 4,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் 84 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
துப்பாக்கி சுடுதலில் 10 மீ., ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் அவனி லெகரா தங்கம் வென்றார்.
இதே போட்டியில் மற்றொரு இந்திய வீராங்கனை மோனா அகர்வால் வெண்கலம் வென்றார்.