ஜார்க்கண்ட் முதலமைச்சரும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைவருமான ஹேமந்த் சோரன் கடந்த பிப்ரவரி மாதம் நிலமோசடி வழக்கில் கைதாகி சிறைக்குச் சென்றார். அப்போது அக்கட்சியின் மூத்த தலைவரான சம்பாய் சோரன் முதலமைச்சராகப் பதவியேற்றார்.
ஹேமந்த் சோரன் ஜாமினில் விடுவிக்கப்பட்டதை அடுத்து சம்பாய் சோரன் பதவி விலகினார். சுமார் 5 மாதங்கள் முதலமைச்சராக பதவி வகித்த காலத்தில் நடந்த சில விஷயங்கள் தன்னை காயப்படுத்தியதாக சம்பாய் சோரன் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
Also Read : சம்பளம் கொடுக்க பணம் இல்ல…ஊழியர்களை வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்த நிறுவனம்
இதையடுத்து டெல்லி சென்ற சம்பாய் சோரன் பாஜக தலைவர்களையும் சந்தித்தார். இதன்பின் சம்பாய் சோரன் பாஜகவில் இணையவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, இன்று ராஞ்சியில் நடந்த விழாவில் சம்பாய் சோரன் அதிகாரபூர்வமாக பாஜகவில் இணைந்தார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் இந்தாண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் சம்பாய் சோரன் பாஜக பக்கம் சாய்ந்திருப்பது ஜார்க்கண்ட் அரசியலில் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது.