பொத்தேரி அருகே கல்லூரி விடுதிகளில் கஞ்சா புழக்கம்: போலீசார் அதிரடி சோதனை!

சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் பணிபுரியும் இளைஞர்கள் ஆகியவர்களை குறிவைத்து போதை பொருட்கள் விற்பனை நடைபெற்று வருவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு இருந்து வருகிறது.

இந்தநிலையில் செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்துள்ள பொத்தேரியில் பிரபல தனியார் கல்லூரி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. தனியார் கல்வி நிறுவனத்தில் படிக்கும் மாணவ மற்றும் மாணவிகள் தனியார் கல்வி நிறுவனத்திற்கு உட்பட்ட, விடுதிகளில் தங்குவது மட்டுமில்லாமல், அருகில் இருக்கும் தனியார் விடுதிகள் மற்றும் தனியாக வீடு எடுத்து தங்கி படித்து வருகின்றனர்.

கல்லூரி மாணவர்கள் அதிக அளவு போதைப் பொருட்களை பயன்படுத்துவதாக தொடர் புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. இன்று (ஆக.31) காலையில் திடீரென குவிந்த 1000-க்கும் மேற்பட்ட போலீசார் கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதிகள், தனியாக தங்கள் வீடுகள் உள்ளிட்ட பகுதிகளில் சோதனையை ஈடுபட்டு வருகின்றனர்.

ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு இருப்பதால் அப்பகுதி பெரும் பரபரப்புடன் காணப்படுகிறது. கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் இருக்கிறதா? என ஆய்வு நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து காவல்துறையிடம் தொடர்பு கொண்டு விசாரித்த போது, சோதனை முடிவில் முழு தகவல்கள் தெரிவிக்கப்படும் என தெரிவித்தனர்.

RELATED ARTICLES

Recent News