சூர்யா நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கங்குவா. சரித்திர கால கதையம்சத்துடன் உருவாகியுள்ள இப்படத்தில், பாபி தியோல், திஷா பதானி என்று பல்வேறு நடிகர்கள் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.
10 மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ள இப்படம், மிகவும் பிரம்மாண்டமான முறையில் தயார் ஆகி வருகிறது.
இந்நிலையில், இப்படத்திற்காக, தனது சொந்த குரலில், தெலுங்கு மொழியில் சூர்யா டப்பிங் பேசியுள்ளாராம்.
பொதுவாக தெலுங்கு மொழியில் டப்பிங் செய்யப்படும் சூர்யாவின் படங்களுக்கு, அவரது தம்பி கார்த்தி தான் டப்பிங் பேசி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.