தொடர் கனமழை: ஆந்திரா, தெலங்கானாவில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 31-ஆக அதிகரிப்பு!

ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்து காட்டாற்று வெள்ளம் போல மழைநீர் பாய்ந்தோடுகிறது.

ஆந்திராவில் என்டிஆர், கிருஷ்ணா, குண்டூர் உள்ளிட்ட பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. கடந்த 3 நாட்களாக ஆந்திராவில் பெய்த வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளத்தால் கிட்டத்தட்ட 4.5 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். பல கிராமங்கள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன. பல இடங்களில் தண்டவாளங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இந்நிலையில் ஆந்திரா மாநிலத்தில் 15 பேரும், தெலங்கானாவில் 16 பேரும் என மொத்தம் 31 பேரும் மழை தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்ததாக அந்தந்த மாநில நிர்வாகம் அறிவித்துள்ளது.

RELATED ARTICLES

Recent News