ஓநாய்களை கண்டதும் சுட்டுக் கொல்ல முதலமைச்சா் யோகி ஆதித்யநாத் உத்தரவு

உத்தர பிரதேச மாவட்டத்தில் உள்ள பரைச் பகுதியில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக ஓநாய்கள் நடமாட்டம் அதிகமாக காணப்படுகிறது. இந்த ஓநாய்கள் இரவு நேரங்களில் கிராமங்களுக்குள் புகுந்து மனிதா்களை தாக்கி கொல்வதாக கூறப்படுகிறது. ஓநாய்கள் தாக்குதலில் இதுவரை குழந்தை உள்பட 9 போ் கொல்லப்பட்டுள்ளனா்.

இதையடுத்து ஓநாய்களை பிடிக்க உத்தர பிரதேச வனத்துறை தீவிரம் காட்டி வருகிறது. டிரோன்கள் மற்றும் கண்காணிப்பு கேமராக்கள் அடிப்படையில் சோதனை நடத்தி வந்த வனத்துறை ஆங்காங்கே கூண்டுகளை வைத்து இருந்தனா். இதில் 4 ஓநாய்கள் வனத்துறை வைத்த கூண்டுகளில் சிக்கி இருந்தன.

எனினும் மேலும் 2 ஓநாய்கள் கிராமப்பகுதியில் சுற்றி வருவதாக கூறப்பட்டது. மேலும் நேற்று இரவு பாட்டியுடன் உறங்கி கொண்டிருந்த சிறுமியை ஓநாய்கள் கொடூரமாக தாக்கின. இதில் அந்த சிறுமி உயிரிழந்தது. இதையடுத்து ஓநாய்களை பிடிக்க கிராம மக்கள் கோரிக்கையை தீவிரப்படுத்தினா். இதையடுத்து ஓநாய்கள் தாக்குதல் தீவிரமாக எடுத்து கொண்ட உத்தர பிரதேச அரசு கண்ட இடத்தில் ஓநாய்களை சுட்டு கொல்ல உத்தரவிட்டுள்ளது.

RELATED ARTICLES

Recent News