நல்ல பாம்பின் வாயோடு வாய் வைத்து ரீல்ஸ் எடுத்த இளைஞர் உயிரிழப்பு!

நல்ல பாம்பின் வாயோடு வாய் வைத்து ரீல்ஸ் எடுத்த இளைஞர் உயிரிழந்தனார்.

தெலுங்கானா மாநிலம் காமா ரெட்டி மாவட்டத்தில் உள்ள தேசய்யாபேட்டையை சேர்ந்த இளைஞர் சிவா. இவர் பாம்பு பிடிக்கும் குடும்பத்தை சேர்ந்த சிறு வயது முதல் பாம்பு பிடிக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்தார்.

இந்த நிலையில் அந்த கிராமத்தில் உள்ள வீடு ஒன்றில் நல்ல பாம்பு ஒன்று நேற்று (செப்.6) மதியம் புகுந்தது.

உடனே சிவாவுக்கு தகவல் கிடைந்த நிலையில் விரைந்து வந்த சிவா அந்த நல்ல பாம்பை பிடித்து அதன் வாயோடு வாய் வைத்து கவ்வி கொண்டு சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்ய ரீல்ஸ் எடுத்தார்.

அப்போது சிவா நாக்கில் அந்த பாம்பு ஒரு கொத்து கொத்தியது. ரீல்ஸ் எடுக்கும் ஆர்வத்தில் இருந்து சிவாவுக்கு பாம்பு கடித்தது தெரியவில்லை.

இதனால் சற்று நேரத்தில் விஷம் உடல் முழுவதும் பரவி சிவா அதே இடத்தில் சரிந்து விழுந்து மரணம் அடைந்தார்.

RELATED ARTICLES

Recent News