வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘தி கோட்’ திரைப்படம் செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரூ.380 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் 5000 திரைகளில் ரிலீஸ் செய்யப்பட்டது. இந்தப் படத்தில் சிநேகா, மீனாட்சி சவுத்ரி, பிரசாந்த், மோகன், பிரபு தேவா, ப்ரேம்ஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.
கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும், முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் பட்டையை கிளப்பியது. தி கோட் திரைப்படம் முதலில் நாளில் ரூ. 126.32 கோடி வசூலித்ததாக படத்தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வகமாக அறிவித்தனர். இதைத்தொடர்ந்து தி கோட் இரண்டாவது நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சரிவு ஏற்பட்டுள்ளது.
இரண்டாவது நாளில் இந்தியா முழுவதும் பாக்ஸ் ஆஃபீஸில், ரூபாய் 25 கோடி வசூல் செய்ததாக பாக்ஸ் ஆஃபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்றும் நாளையும் விநாயகர் சதூர்த்தி மற்றும் வார இறுதி நாள் என்பதால், படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என படக்குழு நம்புகின்றது.