ஆசிரியர்கள் வேலை நிறுத்தம்; வகுப்பறைகள் பூட்டப்பட்டு வெறிச்சோடி காணப்படும் பள்ளிகள்!

தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடர்ந்து பல்வேறு கிராமங்களில் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப் பள்ளிகளில் மாணவர்கள் இன்றி வகுப்பறைகள் பூட்டப்பட்டு வெறிச்சோடி காணப்படுகிறது.

புதிய ஓய்வூதிய திட்டத்தினை ரத்து செய்து பழைய ஓய்வதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், ஆசிரியர்களுக்கான பணி பாதுகாப்பு சட்டத்தை இயற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தமிழ்நாடு முழுவதும் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்திலும் ஆசிரியர்கள் ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆசிரியர் பள்ளிக்கு வராததால் மாணவர்களும் பள்ளிக்கு வரவில்லை அதனால் பெரும்பாலும் இடங்களில் பள்ளிகள் பூட்டப்பட்டு வெறிச்சோடி காணப்படுகின்றது.

குன்னம் அருகே உள்ள வேப்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் புது வேட்டக்குடி, காடூர், அந்தூர், அசூர், துங்கபுரம், ஓலைப்பாடி உள்ளிட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் வகுப்பறைகள் மூடி கிடக்கின்றது.

இதனால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இன்றி பள்ளி வெறிச்சோடி காணப்படுகிறது. மேலும் ஒரு சில பள்ளிகளில் வீடு தூரம் கல்வி திட்ட ஆசிரியர்கள் மற்றும் தற்காலிக ஆசிரியர்களைக் கொண்டு பள்ளிக்கு வந்துள்ள மாணவர்களுக்கு பாடம் நடத்தப்பட்டு வருகின்றது.

RELATED ARTICLES

Recent News