சில படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய பிரேம்குமார், 96 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். விஜய்சேதுபதி, த்ரிஷா ஆகியோர் நடித்திருந்த இந்த திரைப்படம், சேராத காதல் கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்தது.
விமர்சகர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை பெற்ற இப்படம், வசூலிலும் லாபத்தை பெற்றது. இந்நிலையில், இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கு, இயக்குநர் பிரேம்குமார் திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த படத்தின் திரைக்கதையை எழுதிவிட்டேன் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த படத்திற்கு, த்ரிஷாவும், விஜய்சேதுபதியும் கால்ஷீட் கொடுக்கும் பட்சத்தில், விரைவில் 96 படத்தின் 2 ஆம் பாகம் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.