அமெரிக்காவில் ராகுல் காந்தியின் பேச்சு.. கிளம்பிய எதிர்ப்பு.. ஆதரவாக வந்த பத்திரிகையாளர்..

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், நாடாளுமன்றத்தின் எதிர்கட்சி தலைவருமான ராகுல் காந்தி, கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, அமெரிக்காவிற்கு சென்றிருந்தார்.

அங்கு உரையாற்றிய அவர், பாஜகவையும், RSS-ஐயும் கடுமையாக விமர்சித்திருந்தார். இவரது பேச்சை கேட்ட பாஜகவினர், ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில், ராஜ்தீப் சர்தேசாய் என்ற பிரபல பத்திரிகையாளர் ஒருவர், தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், “ராகுல் காந்தி அமெரிக்காவில் உதிர்த்த வார்த்தைகள் அனைத்தும் சர்ச்சையாவதை பார்க்கும்போது புதிராக உள்ளது. ராகுல் காந்தி வெறும் எதிர்கட்சியின் தலைவர் மட்டும் தான். இன்னும் அவர் பிரதமர் ஆகவில்லை” என்று கூறியுள்ளார்.

இவ்வாறு இவர் வெளியிட்டுள்ள இந்த பதிவு, 6 ஆயிரத்திற்கும் அதிகமான லைக்ஸ்களையும், பார்வைகளையும் பெற்று, வைரலாகி வருகிறது. என்னதான் இந்த பதிவு வைரல் ஆகினாலும், இந்த பதிவை பார்த்த சில நெட்டிசன்கள், அவரை விமர்சனமும் செய்து வருகின்றனர்.

RELATED ARTICLES

Recent News