16 வயது மாணவனுடன் உறவு.. 26 வயது ஆசிரியர் கைது..

அமெரிக்கா நாட்டில் மிசூரி என்ற பகுதியை சேர்ந்தவர் ஹைலி. 26 வயதான இவர், உயர்நிலை பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

இவர், அந்த பள்ளியில் படிக்கும் பல்வேறு மாணவர்களுடன் நெருக்கமாக பழகி வந்ததாக கூறப்படுகிறது. இதனால், அந்த பள்ளி நிர்வாகமும், ஹைலியை கண்டித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம், 16 வயது மாணவரை காதலித்து, அவருடன் உடலுறவு கொண்டதற்காக, ஹைலி கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், தற்போது அவருக்கு 4 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டிய ஆசிரியை, மாணவனுடன் உடலுறவு கொண்ட சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

RELATED ARTICLES

Recent News