“எனக்கு பலருடன் உறவு இருந்தது” – அஜித் பட நடிகை பகீர்!

அஜித் நடிப்பில், மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் விடாமுயற்சி. இந்த திரைப்படத்தில், நடிகை ரெஜினா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

மேலும், வேறு சில படங்களிலும் அவர் நடித்து வருகிறார். இந்நிலையில், நடிகை ரெஜினா ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.

அந்த பேட்டியில், “கடந்த காலங்களில், நான் பலருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்துள்ளேன். இதனை ஒரு வரியில் சொல்ல வேண்டும் என்றால், நான் ஒரு சீரியல் டேட்டர்” என்று கூறி, பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளார்.

மேலும், “இப்படி வெளிப்படையாக பேசுவதால், விமர்சனங்கள் வரும். ஆனால், நான் எதையும் மறைக்க விரும்பவில்லை” என்றும் ரெஜினா தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES

Recent News