லெஜண்ட் சரவணனின் அடுத்த கதாநாயகி யார்?

லெஜண்ட் படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் அருள் சரவணன். இந்த படத்திற்கு பிறகு, துரை செந்தில் குமார் இயக்கும் அடுத்த படத்தில், இவர் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு, அடுத்த கட்டமாக வெளிநாடுகளில் நடைபெற உள்ளது. இந்நிலையில், இப்படத்தில் இவருக்கு ஜோடியாக யார் நடிக்கிறார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி, நடிகை பயல் ராஜ்புத் தான், இந்த படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளாராம். தெலுங்கு மொழியில் உருவான, மங்கலவாரம் என்ற ப்ளாக்பஸ்டர் ஹிட் படத்தில் நடித்தவர் தான், இந்த பயல் ராஜ்புத் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES

Recent News